https://www.dinamalar.com/news_detail.asp?id=2711947

சென்னை: சட்டசபை தேர்தலில், தி.மு.க.,சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனு வாங்கும் பணி, நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, ஒரே நாளில், 1,000 விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டன. தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.,வினருக்கு, விருப்ப மனு வினியோகம், நேற்று சென்னை, அறிவாலயத்தில் துவங்கியது.